ECONOMYNATIONALSUKANKINI

கால்பந்து- பிரீமியர் லீக் நிறுத்தப்படுகிறது, சூப்பர் லீக் போட்டியில் 18 குழுக்கள் பங்கேற்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21– பிரீமியர் லீக் போட்டிகள் குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தப்படும் வேளையில் இந்த தவணைக்கான  சூப்பர் லீக் போட்டியில் 18 குழுக்கள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில் இதற்கான இணக்கம் காணப்பட்டதாக மலேசிய லீக் கால்பந்து அமைப்பு கூறியது.

மலேசிய லீக் போட்டிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டதன் வழி 2023 ஆம் ஆண்டில் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு குழுவும் 34 ஆட்டங்களில் பங்கேற்க வேண்டும். தற்போது எப்.ஏ. கிண்ண மற்றும் மலேசிய கிண்ண ஆட்டங்கள் நீங்கலாக 22 ஆட்டங்களில் மட்டுமே அக்குழுக்கள் பங்கேற்கின்றன.

முப்பத்து நான்கு ஆட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்பது ஃபிபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் விதித்த நிபந்தனையாகும். அந்த உலகின் பிரதான கால்பந்து அமைப்பின் உத்தரவை மலேசிய கால்பந்து சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

மலேசிய லீக் விளையாட்டில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பில் 23 வயதுக்கும் குறைவான ஆட்டக்காரர்களை உள்ளடக்கிய ரிசர்வ் லீக் குழு உருவாக்கவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மறு மறுசீரமைப்பின் வழி போட்டிகளின் தரத்தை உயர்த்துவதற்கும் ஆட்டக்காரர்களின் வயது இடைவெளியைக் குறைக்கவும் உதவும் என்பதோடு கால்பந்து விளையாட்டுத் துறையில் ஏற்படும் நவீன மாற்றங்களுக்கேற்ப அனைத்துலக தரத்தை நிலைநிறுத்தவும் இயலும் என்று மலேசிய லீக் கால்பந்து அமைப்பின் தலைவர் டத்தோ அப்துல் கனி ஹசான் கூறினார்.


Pengarang :