ECONOMYSELANGORSMART SELANGOR

மக்கள் வசிப்பதற்கு உகந்த சூழல் கொண்ட வீடமைப்புத் திட்டங்களை மாநில அரசு உருவாக்கும்

சிப்பாங், ஜூலை 22- மக்கள் வசதிக்காக வீடுகளை குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளை மாநில அரசு நீடித்த முறையில் நிர்மாணித்து வரும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

வசிப்பதற்கு உகந்த சூழல் கொண்ட மாநிலமாக சிலாங்கூரை உருவாக்கும் மாநில அரசின் திட்டத்திற்கேற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

நீடித்த மேம்பாட்டைப் பற்றி அரசாங்கம் யோசித்து வருகிறது. ஏனென்றால், அது காலம் முழுவதும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதோடு முறையாக செயல்படும் நிலையில் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

கட்டிடம், சாலை மற்றும் பூங்கா உள்ளிட்ட எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் சிறப்பான பராமரிப்பைக் கொண்டிருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்று இங்கு பண்டார் பெர்டாயா ஹூனி சிலாங்கூர் வீடமைப்புத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த அடுக்குமாடி வீட்டு குடியிருப்பு பகுதியிலுள்ள காலி இடங்களில் சிறார் விளையாட்டு உபகரணங்கள், குளம், பாத சிகிச்சைக்கான நடைபாதை, சோலார் விளக்குகள், உடற்பயிற்சி மையம் போன்ற வசதிகளை ஏற்படுத்த 140,000 வெள்ளி செலவிடப்பட்டதாக அவர் சொன்னர்.

அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்த குடியிருப்பு பகுதி நல்ல நிலையிலும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய பராமரிப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :