ALAM SEKITAR & CUACAECONOMY

சட்டவிரோதமாக குப்பை கொட்டியது தொடர்பில் 1,153 குற்றப்பதிவுகள்- எம்.பி.எஸ்.ஜே. வழங்கியது

ஷா ஆலம், ஜூலை 26- இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டிய குற்றத்திற்காக சுபாங் ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஜே.) 1,153 குற்றப்பதிவுகளை வெளியிட்டுள்ளது.

அந்த குற்றப்பதிவுகளில் 1,139 சிறு குற்றங்களுக்கான நான்காம் பிரிவின் கீழும் 14 குற்றப்பதிவுகள் சிறு குற்றங்களுக்கான ஐந்தாம் பிரிவின் கீழும் வழங்கப்பட்டன என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இதன் தொடர்பில் ஆறு சம்பவங்கள்  நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளன.

மேலும் சம்பவங்களுக்கு நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட வேளையில்  மற்ற சம்பவங்கள் விசாரணை கட்டத்தில் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

சட்டவிதிகளின் படி சம்பந்தப்பட்ட நபர் சட்டவிரோதமாக குப்பை கொட்டியது தெளிவாக நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டமன்றத்தில் இன்று சட்டவிரோதமாக குப்பை கொட்டும் குற்றங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

காணொளி அல்லது வேறு விதமான பதிவுகள் இல்லாத போதிலும் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தாலும் கூட சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று இங் ஸீ ஹான்  தெரிவித்தார்.


Pengarang :