ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

பேரிடர்களை எதிர்கொள்ள நடப்பு திட்டங்கள் சீரமைப்பு, புதிய திட்டங்கள் உருவாக்கம்

ஷா ஆலம், ஜூலை 27- பேரிடர் ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்வதற்கு ஏதுவாக நடப்புத் திட்டங்களை மேம்படுத்துவது மற்றும் புதிய திட்டங்களை உருவாக்குவது குறித்து முதல் சிலாங்கூர் திட்டத்தில் கோடி காட்டப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை தெரிவிப்பதற்கு ஏதுவாக வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் ஸ்மார்ட் சிலாங்கூர் நடவடிக்கை மையத்தை தரம் உயர்த்துவதும் அந்த திட்டங்களில் அடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பேரிடர் மேலாண்மை நடவடிக்கைத் திட்டமும் உருவாக்கப்படும். தயார் நிலை, உடனடி நடவடிக்கை, நிர்வாக மேம்பாடு மற்றும் ஆக்ககரமான தொலைத் தொடர்பு ஆகியவையும் அதில் வரையறுக்கப்பட்டிருக்கும் என அவர் சொன்னார்.

ஆற்றை ஆழப்படுத்துவது, நீர் சேகரிப்பு குளங்களை மேம்படுத்துவது மற்றும் நிர்மாணிப்பது போன்ற வெள்ளத் தடுப்பு திட்டங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று மாநில சட்டமன்றத்தில் முதல் சிலாங்கூர் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.

மேம்பாட்டுத் திட்டங்கள், கடுமையான வானிலை மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இயற்கைப் பேரிடர்களால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்ட மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார் அவர்.

 


Pengarang :