ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

குப்பை அழிப்பு மையங்களில் கழிவுப் பொருள்களை குறைக்க ஐந்து திட்டங்கள்

ஷா ஆலம், ஜூலை 27- குப்பை அழிப்பு மையங்களில் சேரும் கழிவுகளின் அளவைக் குறைப்பதற்கு ஏதுவாக ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை முறையை உருவாக்க ஐந்து திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தவுள்ளது.

அந்த ஐந்து திட்டங்களில் இரண்டு மாற்றத்திற்கான உந்து சக்தியாக விளங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கழிவு மேலாண்மை நடவடிக்கைத் திட்டம் மற்றும் கழிவுகளை மின்சக்தியாக மாற்றும் ஆலையுடன் (டபள்யு.டி.இ.) கூடிய ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை மையம் ஆகியவை இதர இரு திட்டங்களாகும் என அவர் குறிப்பிட்டார்.

டபள்யு.டி.இ. ஆலை நிர்மாணிப்பின் வழி தினசரி 4,700 டன் குப்பைகளை அழிக்கவும் அதன் மூலம் 90 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் முடியும். இது சேகரிக்கப்படும் குப்பைகளில் 67 விழுக்காடாகும் என அவர் தெரிவித்தார்.

தினசரி 7,220 டன் குப்பைகள் சிலாங்கூர் தினமும் கையாள்வதாக கூறிய அவர், இது நாட்டின் மொத்த குப்பைகளில் 22 விழுக்காடாகும் என்றார்.


Pengarang :