ECONOMYSELANGORTOURISM

அனைத்துலக சுற்றுலா மையமாக சிப்பாங் மாவட்டம் தரம் உயர்த்தப்படும்

ஷா ஆலம், ஜூலை 29 – சிலாங்கூரின் தெற்குப் பகுதியை குறிப்பாக சிப்பாங் மாவட்டத்தை அனைத்துலக சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வட்டாரத்தில் சுற்றுலா நடவடிக்கைகளை அதிகரித்து, மாநிலத்தின் பொருளாதார மதிப்பை உயர்த்தி உள்ளூர் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

இந்த திட்டத்தை சிப்பாங்கிற்கு அருகில் உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்நோக்கத்திற்காக கடலோரப் பகுதியில் சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் நிர்மாணிக்கப்படும் என அவர் சொன்னார்.

இந்த திட்டம் 10 ஆண்டுகளில் கட்டம் கட்டமாக உருவாக்கப்படும் எனக் கூறிய அவர், அடுத்த  ஐந்தாண்டுகளில் இத்திட்டத்தின் மேம்பாடுகளைக்  காண முடியும் என்றார்.

நேற்று இங்குள்ள  மாநில அரசு தலைமையக கட்டிடத்தில்  ‘துக்காங்’ எனப்படும் முதலாவது கைவினைப் பொருள் தயாரிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம்  முதலாவது சிலாங்கூர் திட்டத்தை தாக்கல் செய்த மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, 2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்குள் சுற்றுலாத் துறையை வலுப்படுத்துவது உள்ளிட்ட நான்கு அடிப்படைக் கூறுகளை வெளியிட்டார்.


Pengarang :