ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

பருவநிலை மாற்றத்தைக் கையாளும் வழிமுறை நான்கு மாதங்களில் தாக்கல் செய்யப்படும்

ஷா ஆலம், ஆக 2– மாநிலத்தில் பருவநிலை மாற்றத்தைக் கையாள்வது தொடர்பான ஆய்வின் முடிவுகள் நான்கு மாத காலத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

மலேசிய புத்ரா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் பங்கேற்பிலான சிலாங்கூர் பருவநிலை மாற்ற நடவடிக்கை மன்றத்தின் கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஆலோசகர் என்ற முறையில் மலேசிய புத்ரா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரை தாங்கள் நியமித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்வதற்கும் தீர்வு காண்பதற்கும் உரிய வழிவகைகளை உள்ளடக்கிய அந்த அறிக்கை மூன்று அல்லது நான்கு மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று டாமன்சாரா உத்தாமா உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார். பருவநிலை மாற்றம் தொடர்பான தொடக்கக் கட்ட ஆய்வின் முடிவுகள் குறித்து ஜமாலியா கேள்வியெழுப்பியிருந்தார்.

பருநிலை மாற்றம் மற்றும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பது தொடர்பான பிரச்னைகளைக் கையாள்வதற்காக பசுமைத் தொழில்நுட்ப நடவடிக்கை மன்றம் அமைக்கப்படும் என்று ஹீ லோய் சியான் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.


Pengarang :