ANTARABANGSAECONOMYNATIONALSUKANKINI

ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்த சவுதி அரேபியா விண்ணப்பம்

ரியாத், ஆக 4- பத்தாவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை சவுதி அரேபியா கடந்த புதன்கிழமை சமர்ப்பித்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்தை சவுதி அரேபிய ஒலிம்பிக் செயல் குழு மற்றும் பாராலிம்பிக் ஆணையம் ஆகியவை ஆசிய ஒலிம்பிக் மன்றத்திடம் சமர்ப்பித்துள்ளதாக சவுதி அரேபிய செய்தி நிறுவனம் கூறியது.

இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் 1986இல் தொடங்கப்பட்ட இந்த போட்டியை ஜப்பான், சீனா, தென் கொரியா மற்றும் கஜகஸ்தானுக்குப் பிறகு  ஏற்று நடத்தும் முதல் மேற்கு ஆசிய நாடாக சவுதி அரேபியா விளங்கும்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்காக ஆசிய ஒலிம்பிக் மன்றம் தனது பேராளர் மாநாட்டை நடத்துவதற்கு முன்னர் அதன் நிர்வாக அதிகாரிகள் அக்டோபர் மாதம் கம்போடியாவில் கூடி இந்த கோரிக்கையை ஆராய்வார்கள்.

இந்தப் போட்டியில் ஆசியாவில் உள்ள 32 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Pengarang :