ECONOMYSELANGORSUKANKINI

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் சிலாங்கூர்  கிண்ண  ஒற்றுமை கபடி போட்டி கிள்ளானில் நடைபெறுகிறது

கிள்ளான், ஆக. 8 – சிலாங்கூர் மாநில அளவிலான ஒற்றுமை கோப்பை கபடி போட்டி கிள்ளானில் நடைபெறவுள்ளது. கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ வின் மக்கள் சேவை மையம் வட்டார குடியிருப்பாளர் சங்கம், மலேசிய கபடி சங்கம், சிலாங்கூர் மாநில கபடி சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கூட்டாக  இப்போட்டியை ஏற்பாடு செய்கின்றன.

இப்போட்டியில் கோலா லங்காட், கோம்பாக், கிள்ளான், உலு லங்காட், கோலா சிலாங்கூர் போன்ற பகுதி மட்டுமின்றி, சிறப்பாக சரவாக் மாநில பூமி கெஞ்சாலாங் குழுவும் கலந்து கொள்ளவுள்ளது.

அதில் . 11 ஆண்கள் அணிகளும் 7 பெண்கள் அணிகளும் போட்டியிட உறுதிப்படுத்தியுள்ளனர். இப்போட்டியில் இந்தியர்கள் மட்டுமல்லாது பிற இனத்தவர்கள் கலந்து கொண்டு போட்டிக்கு சிறப்புச் சேர்க்க உள்ளனர் என ஏற்பாட்டுக் குழுவினர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.

வரும் 14.8.2022 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடங்கி மாலை 6.00 வரை தாமான் ஸ்ரீ அண்டலாஸ் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இப்போட்டியின் வழி பல இன மக்களிடையே இன ஒற்றுமையை ஏற்படுத்துவதுடன் கலாச்சார பரிமாற்ற அறிமுகங்கள் ஏற்படவும் இப்போட்டி வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டது.

சுதந்திர மாதமான ஆகஸ்டில் இரண்டு கலை கலாச்சார போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கபடிக் போட்டியை தொடர்ந்து மலாய்க்காரர்களின் தற்காப்புக் கலையான சீலாட் போட்டியும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த ஜூன் மாதம் சார்லஸ் சந்தியாகோவின் முயற்சியில் சீனர்களின் சிங்க நடனப் போட்டியும் சிறப்பாக நடைபெற்றதாக கூறப்பட்டது.


Pengarang :