ECONOMYSELANGOR

உலு சிலாங்கூரின் 188 பகுதிகளில் நீர் விநியோக தடங்கள் நீரை சேமிக்க பயனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது

ஷா ஆலம், ஆகஸ்ட் 8: உலு சிலாங்கூரில் உள்ள 188 பகுதிகளில் உள்ள நுகர்வோர், சுங்கை ராசா நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (LRA) இயந்திர மேம்பாடு மற்றும் நீர் வழங்கல் அமைப்பைப் சரிசெய்வதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9 முதல் 11 வரை திட்டமிடப்பட்ட நீர் தடை ஏற்படும் என்பதால், பயனீட்டாளர்கள்  தொடர்ந்து போதுமான தண்ணீரைச் சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும், ஆகஸ்ட் 11 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு தண்ணீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும் என்றும் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“பயனர்கள் வீட்டிற்கும் போதுமான தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் மற்றும் அனைத்து நீர் சேமிப்பு கொள்கலன்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி  செய்யவும், அவர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்.” என்று அவர் ஆகஸ்ட் 5 அன்று பேஸ்புக்கில் கூறினார்.

முன்னதாக, மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் நீர் வழங்கப்படும் என்று ஆயர் சிலாங்கூர் தெரிவித்தது.

பயனர்கள் பேஸ்புக், இன்ஸ்தாகிராம் மற்றும் ட்விட்டர் இல் ஆயர் சிலாங்கூரின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சேனல்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைப் பெறலாம் அல்லது http://www.airselangor.com வலைதளம் மற்றும் ஆயர் சிலாங்கூர் செயலியில் புகார்களைத் தெரிவிப்பதுடன் 15300 என்ற எண்ணை அழைக்கலாம்.

நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:


Pengarang :