ECONOMYPENDIDIKANSELANGORWANITA & KEBAJIKAN

மகளிரின் உயர் கல்விக்கு உதவ சிறப்பு உபகாரச் சம்பளத் திட்டம்- மாநில அரசு அறிமுகம்  

ஷா ஆலம், ஆக 9- மகளிர் உயர்கல்வி பெறுவதற்குரிய வாய்ப்பினைப் பெறுவதற்கு உதவும் வகையில் சிலாங்கூர் இக்தியார் மகளிர் சிறப்பு உபகாரச் சம்பளத் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்துகிறது.

மகளிருக்கு தொடர்ந்து ஆக்கத் திறனளிக்க வகை செய்யும் இந்த நீண்ட காலத் திட்டத்திற்காக மாநில அரசு வருடாந்திர நிதியாக 200,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உயரிய தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டவர்களாக மகளிரை உருவாக்கக்கூடிய இத்திட்டத்தின் கீழ் டிப்ளோமா, இளங்கலை, முதுகலை மற்றும் தத்துவத் துறை முனைவர் பட்டப்படிப்பை  மேற்கொள்ளும் மகளிருக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் மேம்பாட்டில் மகளிரின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த தொடர்ச்சியான கல்வி பெரிதும் துணை புரியும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆயுள் வரை கல்வி திட்டத்தின் கீழ் 12 பெண்கள் சிலாங்கூர் மகளிர் ஆக்கத்திறன் உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளதாக அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

இந்த திட்டத்தை மேற்கொள்வதற்காக ஓ.யு.எம். எனப்படும்  பொது நிலைப் பல்கலைக்கழகத்துடன் மாநில அரசு வியூக ஒத்துழைப்பை நல்கி வருவதாக மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் ஜூய்ரியா ஜூல்கிப்ளி கடந்த மாதம் 13 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :