ECONOMYMEDIA STATEMENT

பிரதமரின் டெலிகிராம் சிக்னல் கணக்குகள் (ஹேக்) ஊடுருவ படுவதாக புகார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தனது தனிப்பட்ட டெலிகிராம் மற்றும் சிக்னல் கணக்குகள் பொறுப்பற்ற தரப்பினரால் ஊடுருவப் பட்டதாக (ஹேக்) செய்யப்பட்டது குறித்து மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) மற்றும் ராயல் மலேசியா காவல்துறை (ஆர்எம்பி) ஆகியவற்றுடன் புகார் செய்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தக் கணக்குகள் மோசடியான குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப் பட்டதாக நம்புவதாகவும், சம்பந்தப்பட்ட கணக்குகளில் இருந்து செய்திகளைப் பெற்றவர்கள் அவற்றைப் புறக்கணித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

“எந்தவொரு தனிநபரும் கணக்குகளில் இருந்து ஒரு செய்தியைப் பெற்றால், அது பிரதமரைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் ஒரு நபரின் போலிச் செய்தி என்பதால் அதை புறக்கணிக்க வேண்டும்.

அறிக்கையின்படி, “நிதி மற்றும் பிற மோசடிகளால் பாதிக்கப்பட்ட எவரும் உடனடியாக ஆர்எம்பி மற்றும் எம்சிஎம்சிக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்”.


Pengarang :