ANTARABANGSAECONOMYSUKANKINI

19 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்து- இறுதியாட்டத்தில் வியட்னாம்-மலேசியா மோதல்

ஹனோய், ஆக 10– வியட்னாமின் தென் மாநிலமான பின் டுவோங்கில் நேற்று நடைபெற்ற 19 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டியில் வியட்னாம் தாய்லாந்தை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

இறுதியாட்டத்திற்கு ஏற்கனவே தகுதி பெற்ற நிலையிலும் வியட்னாம் குழு தாய்லாந்துடனான போட்டியில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடியதாக வியட்னாம் செய்தி நிறுவனம் கூறியது.

ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் வியட்னாம் ஆட்டக்காரர் முதல் கோலை போட்டு குழுவை வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தார்.

தாய்லாந்து குழு தொடர்ந்து பல அபாயகரத் தாக்குதல்களை வியட்னாம் கோல் முனையில் நடத்திய போதிலும் கோலடிக்கும் அதன் முயற்சி வெற்றி பெறவில்லை.

வரும் வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் இப்போட்டியின் இறுதியாட்டத்தில் வியட்னாம் குழு மலேசியாவை சந்திக்கிறது.


Pengarang :