ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

பெக்காவானிஸ் ஏற்பாட்டில் 60 தனித்து வாழும் தாய்மார்களுக்கு உணவுத் தயாரிப்பு பயிற்சி

ஷா ஆலம், ஆக 11– சிலாங்கூர் மகளிர் சமூக நல அமைப்பான பெக்காவானிஸ் ஏற்பாட்டில் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த 60 தனித்து வாழும் தாய்மார்களுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்பு பயிற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் கரிப்பாப், சமோசா உட்பட ஐந்து விதமான உணவுப் பதார்த்தங்களை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டதாக அந்த அமைப்பின் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது கூறினார்.

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்ந்த மகளிர் இந்த பயிற்சியில் பங்கேற்றதாக கூறிய அவர், அவர்கள் அடைந்துள்ள மேம்பாடுகளை அடுத்த இரண்டு மாதங்களுக்கு பெக்காவானிஸ் கவனித்து வரும் என்றார்.

இது தவிர, உடம்பு பிடி, முக ஒப்பனை, தையல் கலை உள்ளிட்ட பயிற்சிகளை உள்ளடக்கிய நோர் பெக்காவானிஸ் திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
திட்டமிட்ட இலக்கை அடைவதற்காக இந்த திட்டங்களை நாங்கள் கட்டம் கட்டமாக மேற்கொள்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த தனித்து வாழும் தாய்மார்களுக்காக கைத்தொழில் பயிற்சி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மஸ்டியானா முன்னதாக கூறியிருந்தார்.

சுயமாக பொருளாதாரத்தை ஈட்டும் அளவுக்கு திறமை பெறும் வரை அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்பதோடு மற்றவர்களுக்கு வழிகாட்டக் கூடிய பயிற்சியாளர்களாக உருவாகக்கூடிய வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும் என்றார் அவர்.


Pengarang :