ANTARABANGSAECONOMY

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சால்மன் ருஷ்டிக்கு கத்திக் குத்து- நியுயார்க்கில் சம்பவம்

ஷா ஆலம், ஆக 14- சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சால்மன் ருஷ்டி அமெரிக்காவின் நியு யார்க் நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்ற தொடங்கிய வேளையில் ஆசாமி ஒருவனால் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார்.

மேடையிர் இருந்த 75 வயதான ருஷ்டியை அந்த ஆடவன் 10 முதல் 15 தடவை சரமாரியாக குத்தியதாக எஷோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியது.

பலத்த காயங்களுக்குள்ளான ரஷ்டி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் தாக்குதலில் ஈடுபட்ட ஆடவனை போலீசார் வளைத்துப் பிடித்தனர்.

இதனிடையே, ருஷ்டியின் உடல் நிலை குறித்து கருத்துரைத்த மருத்துவர் ஒருவர், அவரில் உடல் நிலை மோசமாக இருந்தாலும் குணப்படுத்தி விட முடியும் எனக் கூறினார்.

சாத்தானின் வேதங்கள் எனும் நாவலை எழுதியதன் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ருஷ்டியை கொலை செய்ய ஈரான் நாட்டின் தலைமைத்துவம் கடந்த 80ஆம் ஆண்டுகளில் உத்தரவிட்டது.


Pengarang :