ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 3,943 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- நால்வர் உயிரிழப்பு

ஷா ஆலம், ஆக 14– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 3,943 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 4,831 ஆக இருந்தது.

இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 28 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

தற்போது 45,375 பேர் இந்நோயின் கடும் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 43,701 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 1,577 பேர் மருத்துவமனைகளிலும் 31 பேர் பி.கே.ஆர்.சி. மையங்களிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 66 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கட்டில்களின் பயன்பாடு 63.6 விழுக்காடாக உள்ள வேளையில் அவற்றில் 17.7 விழுக்காடு கோவிட்-19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நேற்று 4 பேர் மரணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 36,070 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :