ECONOMYSELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனைக்கு அமோக ஆதரவு- அடிக்கடி நடத்த பொதுமக்கள் கோரிக்கை

ஷா ஆலம், ஆக 14- கோலக் கிள்ளானில் இன்று நடைபெற்ற மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. இங்கு மூன்று மணி நேரத்தில் 200 கோழிகள் விற்றுத் தீர்ந்தன.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த சிறப்பான வரவேற்பு காரணமாக இந்த விற்பனை திட்டத்தில் 100 தட்டு முட்டைகளும் 170 பாக்கெட் சமையல் எண்ணெயும் விற்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) துணை விற்பனை நிர்வாகி முகமது பிர்டாவுஸ் மாசூரி கூறினார்.

சந்தையை விட குறைவான விலையில் விற்கப்படும் காரணத்தால் இந்த மூன்று பொருள்களுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த விற்பனையை நல்வாய்ப்பாக பயன்படுத்தி அதிக பொருள்களை வாங்குவதில் பொது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

சமையல் பொருள்களை வாங்குவதில் ஏற்படும் செலவினத்தைக் குறைக்க இத்தகைய மலிவு விற்பனை இயக்கங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர் என்றார் அவர்.

இந்த மலிவு விற்பனை இன்று பெலாபோஹான் உத்தாரா தேசிய பள்ளித் திடலில் காலை 8.00 மணி முதல் நடைபெற்றது.

இந்த விற்பனையில் ஒரு முழு கோழி 13 வெள்ளிக்கும் ஒரு கிலோ பாக்கெட் சமையல் எண்ணெய் 2.50 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 12.50 வெள்ளிக்கும் மீன் ஒரு கிலோ 10.00 வெள்ளிக்கும் விற்கப்பட்டன.


Pengarang :