ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

வறட்சி நிலையை எதிர்கொள்ள மலேசிய தீயணைப்புத் துறை தயார்- தலைமை இயக்குநர் கூறுகிறார்

அலோர்ஸ்டார், ஆக 16- வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் வறட்சி நிலையின் போது ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களை எதிர்கொள்வதற்கு தளவாடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியுள்ளது.

எதிர்பாராத வகையில் ஏற்படக்கூடிய கனமழை உள்பட நிச்சயமற்ற வானிலையை நாடு எதிர்நோக்கி வந்த போதிலும் இத்தகைய சூழல்களால் ஏற்படக்கூடிய இயற்கை பேரிடர்களை எதிர் கொள்ள தமது தரப்பு எப்போதும் தயார் நிலையில் இருந்து வரும் என அவர் குறிப்பிட்டார்.

வானிலை மாற்றங்கள் தொடர்பான தரவுகளை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெறும் நடவடிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சிலாங்கூர், பகாங், ஜோகூர், பேராக், பினாங்கு, கெடா, சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களில் இயற்கை பேரிடர் நிகழும் இடங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார் அவர்.

முதலில் மாநில அளவில் தீக்கான சாத்தியம் நிறைந்த இடங்கள் மீது நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அதன் பின்னரே மாவட்ட அளவில் தீச்சம்பவங்கள் அடிக்கடி நிகழும் இடங்கள் மீதான கண்காணிப்பை வலுப்படுத்துவோம்.

மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு ஏதுவாக முன்களப் பணிகளுக்கு காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் சாதனங்கள் தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்து வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :