ECONOMYNATIONAL

கடலோரப் போர்க் கப்பல் விவகாரம்- கப்பல் நிறுவன முன்னாள் எம்.டி. மீது இன்று குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஆக 16- அரச மலேசிய கடற்படைக்கு கடலோரப் போர்க் கப்பல்களை (எல்.சி.எஸ்.) கட்டும் திட்டம் தொடர்பில் கப்பல் நிறுவனம் ஒன்றின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அந்த நபர் மீது தண்டனைச் சட்டத்தின் 409 வது பிரிவின் கீழ் மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என்று வட்டாரம் ஒன்று கூறியது.

இந்த வழக்கு இன்று காலை 9.00 மணிக்கு செஷன்ஸ் நீதிமன்றம் நீதிபதி சுஸானா ஹூசேன் முன்னிலையில் நடைபெறும் என்பதை நீதிமன்றப் பதிவுகள் காட்டுகின்றன.

அந்த முன்னாள் நிர்வாக இயக்குநருக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்து செய்தி சேகரிப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று அனைத்து ஊடகங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :