ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

தேசியக்  கொடியை சேதப்படுத்திய ஆடவன் பிடிபட்டான்

கோலாலம்பூர், ஆக 19 - ஜாலான் அம்பாங்கில்  மலேசிய சுற்றுலா மையம் (மேடிக்) அருகே உள்ள நடைபாதையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த தேசியக் கொடிகளை கத்திரிக்கோலால் வெட்டியதாக நம்பப்படும்  உள்ளூர் ஆடவரை போலீசார் கைது செய்தனர்.

டிக் டோக் செயலியில்  பகிரப்பட்ட இந்த இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த 41 வயது நபர் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மதியம் 12.37 மணியளவில் ஜாலான் அம்பாங்கில் உள்ள மேட்டிக் கட்டிடத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 427வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக மதியம் 12.30 மணிக்கு அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

 அச்சந்தேக நபர்  தடுப்புக் காவல் அனுமதிக்காக இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்  என்று நூர் டெல்ஹான்  அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சிவப்பு நிற சட்டையும் நீல நிறத் தொப்பியும் அணிந்த அந்த ஆடவர் தேசியக் கொடிகளை வெட்டும்  37 விநாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.

Pengarang :