ECONOMYMEDIA STATEMENTYB ACTIVITIES

கோத்தா கெமுனிங் தொகுதியில் வசதி குறைந்த 3,000 பேருக்கு உணவுக் கூடைகள் விநியோகம்

ஷா ஆலம், ஆக 21- கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி இவ்வாண்டில் வசதி குறைந்த மூவாயிரம் பேருக்கு உணவுக் கூடைகளை விநியோகித்துள்ளது.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு காரணமாக பலர் இன்னும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதை கருத்தில் கொண்டு இத்திட்டம் தொடரப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

நாட்டில் பொருளாதாரம் மீட்சியுறத் தொடங்கியுள்ள போதிலும் வேலை இழப்பு காரணமாக பலர் உதவியை எதிர்நோக்கி காத்திருப்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உதவி தேவைப்படும் தரப்பினருக்கு ஐம்பது முதல் எழுபது வெள்ளி மதிப்புள்ள அரசி, பால், சீனி, பிஸ்கட், உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய உணவுப் பொட்டலங்களை வழங்குகிறோம் என அவர் சொன்னார்.

உதவித் தேவைப்படுவோர் தொகுதி சேவை மையத்திற்கு நேரில் வரலாம் அல்லது சமூகத் தலைவர்கள் அல்லது கவுன்சிலர்களை தொடர்பு கொள்ளலாம் என அவர் கூறினார்.

மாநில அரசின் உதவித் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள விரும்புவோர் 03-55252776 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :