ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோழி ஏற்றுமதி தடையை நீக்குவது தொடர்பில் ஓரிரு மாதங்களில் முடிவு- பிரதமர்

கோலாலம்பூர், ஆக 21 - கோழி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் இன்னும் ஓரிரு மாதங்கள் காத்திருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

 தற்சமயம் சந்தையில் கோழி விநியோகம்  அதிகமாக இருந்தாலும் நாட்டில் அந்த உணவு மூலப் பொருள் போதுமான அளவு இருப்பதையும், விலை சீராக இருப்பதையும் உறுதி செய்ய இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்  சொன்னார்.

இவ்விவகாரம் குறித்து நாங்கள் அமைச்சரவையில் விவாதித்தோம். ஆயினும், கோழிக்கு இன்னும் மானியம் வழங்கப்படுவதால் இதன் தொடர்பில் எங்களால் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை.

இந்த மானியம் ஆகஸ்டு 31-ம் தேதி முடிவடைகிறது.

 அதன் பின்னர் ஓரிரு மாதங்கள் காத்திருப்போம், விநியோகம் போதுமான அளவிலும்  விலை குறைவாகவும் இருக்கும் பட்சத்தில் ஏற்றுமதிக்கு அனுமதிக்கலாம்.  உள்நாட்டுத் தேவைக்கு போதுமான அளவு கோழி இல்லாத நிலையில் ஏற்றுமதிக்கு அனுமதித்தால் அதன் விலை உயரும் என்று இன்று பெர்னாமா டிவி உள்ளிட்ட உள்ளூர் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பான “இன்ஸ்பிரசி செதாஹுன் கெலுர்கா மலேசியா” என்ற கருப்பொருளிலான நேர்காணலில் அவர் கூறினார். 

கோழியின் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட விலை  ஏற்றத்தை சமாளிக்க  கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் கோழி  ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தது.

இருப்பினும், சமீபகாலமாக சந்தையில் கோழி விநியோகம் அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி தடையை நீக்கக்கோரி கோழிப்பண்ணையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Pengarang :