ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHNATIONAL

கெஅடிலான் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்- ரபிஸி வலியுறுத்து

கோலாலம்பூர், ஆக 21- முன்பை விட சிறப்பான அரசாங்கமாக விளங்க முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் மீண்டும் ஏற்படுத்தும் பொறுப்பு கெஅடிலான் கட்சிக்கு உள்ளது.

இந்நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் ‘ஆயோ மலேசியா‘ எனும் பயணத் தொடர் மக்கள் மத்தியில் புரிதலை ஏற்படுத்துவதற்குரிய சரியான நடவடிக்கையாக அமைந்துள்ளது என்று கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.

மக்களுக்கு தெளிவான முறையில் விளக்கத்தையும் இப்போதே தொடங்காவிட்டால் அடுத்த ஐந்தாண்டுகளில் கடலோரப் போர்க்கப்பல் (எல்.சி.எஸ்.) விவகாரம் போன்ற பல ஊழல்கள் நிகழலாம் என்ற எச்சரிக்கையையும் வழங்கினால் அவர்கள் புரிந்து  கொள்வார்கள் என நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.

வெற்றியும் தோல்வியும் இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது. மக்கள் தெளிவான முடிவை எடுக்கக்கூடியவர்கள் என்பதால் பிரசாரத்திற்குப் பின்னர் முடிவை அவர்களிடம் விட்டு விடுகிறோம் என்று தெரிவித்தார்.

நாட்டு மக்களில் 80 விழுக்காட்டினர் நடப்பு அரசாங்கம் மீது அதிருப்தி கொண்டுள்ளதை கடந்த மாதம் 31 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்.

இருபது விழுக்காட்டினர் மட்டுமே நடப்பு அரசாங்கம் மீது திருப்தி கொண்டுள்ளனர் என்பதை அந்த ஆய்வு காட்டுகிறது. வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு காரணமாக மற்ற அனைவரும் அரசின் மீது அதிருப்தி கொண்டுள்ளனர் என்றார் அவர்.

இந்த பயணத்தின் வாயிலாக வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் பிரதமர் தேர்தலை அறிவிக்கும் போது போட்டியை எதிர் கொள்வதற்கு நாம் தயார் நிலையில் இருப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :