ANTARABANGSAECONOMYSELANGOR

விமானத் தொழில் துறையில் துருக்கியுடன் சிலாங்கூர் அணுக்கமாக ஒத்துழைக்கும்

ஷா ஆலம், ஆக 24- துருக்கியின் வான் போக்குவரத்து துறையுடன் (டி.ஏ.ஐ.) மேலும் அணுக்கமான ஒத்துழைப்பை நல்க சிலாங்கூர் நம்பிக்கை கொண்டுள்ளது.

டி.ஏ.ஐ. அமைப்புடன் சீரான ஒத்துழைப்பைக் கொண்டிருப்பதற்கு ஏதுவாக முதலீடு உள்ளிட்ட அம்சங்களை தமது தரப்பு ஆராய்ந்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சைபர் ஜெயாவில் தனது நடவடிக்கையைத் திறந்துள்ள டி.ஏ.ஐ. சிலாங்கூர் அனைத்துலக வான் போக்குவரத்து பூங்காவில் முதலீடு செய்வதற்குரிய சாத்தியம் உள்ள தரப்பாக நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இந்த வான் போக்குவரத்து பூங்கா முதலாவது சிலாங்கூர் திட்டத்தில்  வரையறுக்கப்பட்டுள்ள மாற்றத்திற்கான உந்து சக்திகளில் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.

முதன் முறையாக கடந்தாண்டு நடத்தப்பட்ட வான் போக்குவரத்து கண்காட்சியில் அவர்களின் பங்கேற்பு இரு தரப்புக்கும் இடையே அணுக்கமான ஒத்துழைப்பு நிலவுவதற்கான வாய்ப்பாக விளங்குகிறது என அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

அந்நாட்டிற்கான வருகையின் போது டி.ஏ,ஐ. வான் போக்குவரத்து வசதிகளை நேரில் காண்பதற்குரிய வாய்ப்பினையும் தாம் பெற்றதாக அவர் சொன்னார்.

அனைத்துலக வான் போக்குவரத்து துறையில் முக்கிய நிறுவனமாக விளங்கி வரும் டி.ஏ.ஐ.யின் ஆற்றலை தாம் கண்டறிந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த மாதம் ஜூலை மாதம் 27 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள திட்டங்களில் வான் போக்குவரத்து தொழில்துறை மையத்தை உருவாக்குவதும் ஒன்றாகும்.


Pengarang :