ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டீசல் மோசடிக் கும்பல் முறியடிப்பு- இரு ஆடவர்கள் கைது

ஷா ஆலம், ஆக 27- மானியத் தொகை வழங்கப்பட்ட டீசல் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 163,550 வெள்ளி மதிப்புள்ள டீசலை கைப்பற்றினர்.

உலு லங்காட் மாவட்டத்தின் செமினி வட்டாரத்தில் உள்ள லோட் நிலம் ஒன்றில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த கும்பல் முறியடிக்கப்பட்டது.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிறப்பு குழுவினரால் கைது செய்யப்பட்ட 35 மற்றும் 45 வயதுடைய அவ்விரு ஆடவர்களும் மேல் நடவடிக்கைக்காக தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமது ஸூஹய்ரி மாட் ராடி கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 47 ஐ.பி.சி. கலங்கள், டீசல் என நம்பப்படும் திரவம் அடங்கிய 31 கலங்கள், ஒரு லோரி, ஒரு நான்கு சக்கர இயக்க வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அவர் சொன்னார்.

கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள டீசல் மற்றும் பெட்ரோலை வைத்திருப்பதற்கு மற்றும் கையாள்வதற்கு அனுமதிக்கும் ஆவணங்களை காட்டத் தவறியதைத் தொடர்ந்து அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :