ALAM SEKITAR & CUACAECONOMYPENDIDIKANSELANGOR

குயிஸ் பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் வெள்ளம்- எச்சரிக்கையுடன் இருக்க பணியாளர்களுக்கு அறிவுரை

ஷா ஆலம், ஆக 30- குயிஸ் எனப்படும் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக கல்லூரியில் நேற்று மாலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முழு விழிப்பு நிலையில் இருக்கும்படி அந்த உயர்கல்விக் கூட மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இடைவிடாது பெய்த அடை மழை காரணமாக அந்த உயர்கல்விக் கூட வளாகத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக குயிஸ் பல்கலைக்கழகத் தலைவர் டத்தோ டாக்டர் முகமது ஃபாரிட் ரவி அப்துல்லா கூறினார்.

இந்த பேரிடரிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குரிய வல்லமையை இறைவன் குயிஸ் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டுமாய் தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிலை குறித்து நான் அனுதாபம் கொள்கிறேன். அவர்கள் எந்நேரமும் நிதானத்துடனும் எச்சரிக்கை உணர்வுடனும் இருக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

இந்த திடீர் வெள்ளத்தில் நிர்வாக கட்டிடம், பள்ளிவாசல், மாணவர் குடியிருப்புகள் மற்றும் அந்த வளாகத்தின் தாழ்வானப் பகுதிகள் நீரில் மூழ்கின.


Pengarang :