ECONOMYSELANGORTOURISM

கிள்ளான் துறைமுகம் வழி சொகுசு கப்பலில் பயணம் செய்ய 40,000 பேர் முன்பதிவு- டூரிசம் சிலாங்கூர் தகவல்

ஷா ஆலம், ஆக 30- சொகுசு கப்பலில் பயணம் செய்ய விரும்புவோரின் முதன்மை தேர்வாக கிள்ளான் துறைமுகம் விளங்குகிறது. அந்த உல்லாசப் பயணத்தை மேற்கொள்ள இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதி வரை 40,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

கிள்ளான் துறைமுகம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பதன் காரணமாக உள்நாட்டு மற்றும் அனைத்துலக சுற்றுப்பயணிகள் சொகுசு கப்பல் பயணத்திற்கு இந்த துறைமுகத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்று டூரிசம் சிலாங்கூர் தலைமை செயல்முறை அதிகாரி அஸ்ருள் ஷா முகமது கூறினார்.

சிலாங்கூர் அழகிய மாநிலமாக விளங்கும் அதே வேளையில் சுற்றுப்பயணிகளின் தேவைகேற்ற சுற்றுலா வாய்ப்புகளையும் வழங்குகிறது. அதனால்தான் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் குருசெசஸ் நிறுவனம் தனது சுற்றுலா கப்பல் தளங்களில் ஒன்றாக கிள்ளான் துறைமுகத்தை தேர்ந்தெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் உள்நாட்டு மற்றும் பிராந்திய கடல் சார்ந்த சுற்றுலாத் துறைகள் வளர்ச்சிக் காண்பதற்குரிய வாய்ப்பு ஏற்படுகிறது என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த சுற்றுலா குறித்து கருத்துரைத்த ரிசோர்ட் வோர்ல்ட் குருசெசஸ் நிறுவனத்தின் தலைவர் மைக்கல் கோ, கிள்ளான் துறைமுகத்திலிருந்து பினாங்கு துறைமுகத்திற்கு கெந்திங் ட்ரீம் கப்பலில் பயணிக்கும் மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்திற்கு பொதுமக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருவதாகக் கூறினார்.


Pengarang :