ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALSELANGOR

மாநில அரசின் மற்றுமொரு மக்கள் நலத் திட்டம்- 60 லட்சம் பேருக்கு இலவச காப்புறுதி  பாதுகாப்பு

ஷா அலம், ஆக 31 -   சிலாங்கூர் மாநிலத்திலுள்ள  60 லட்சம் மக்கள்  குழு காப்புறுதி  பாதுகாப்பை பெறுவர். இந்த காப்புறுதி திட்டத்திற்கான முழு பிரிமிய தொகை செலவுகளை   சிலாங்கூர் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.  

பிரச்சனைக்கு உள்ளானவர்களின்   சுமையை குறைக்க உதவுவதற்காக   இன்சான் எனப்படும்  சிலாங்கூர்  காப்புறுதி திட்டத்தின்  நன்மைகளை      பிறந்து  30 நாளான குழந்தைகள் முதல்  80 வயதுடைய  பொதுமக்கள் வரை பெறுவார்கள். 

இறப்பு, விபத்து, மற்றும் காயங்களுக்கு ஏற்ப  10,000 ரிங்கிட் காப்புறுதி பாதுகாப்பை   ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களும் பெறுவார்கள் என சிலாங்கூர் மந்திரிபுசார்  டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி  தெரிவித்தார். 

இந்த பாதுகாப்பை பெறுவதற்கு மக்கள் சிலாங்கூரில் பிறந்திருக்க வேண்டும் அல்லது வாக்காளர்களாக இருக்க வேண்டும்  என்ற இரு நிபந்தனைகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டுமென நேற்றிரவு  ஷா அலம்   மெர்டேக்கா சதுக்கத்தில்  மாநில நிலையிலான தேசிய தின கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

Pengarang :