ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் ஒற்றுமைத் தூதர்கள் பெரும் பங்காற்றுவார்கள்

கிள்ளான், ஆக 31 - சிலாங்கூர் ஒற்றுமை தூதர்களாக 15 இளைஞர்கள் நியமனம் செய்யப்பட்டதானது மாநிலத்தில் உள்ள மக்களிடையே சிறந்த புரிதலை ஏற்படுத்தக்கூடிய உற்சாகமான தலைவர்களை உருவாக்கும் முயற்சியாகும்.

 அந்த ஒற்றுமைத் தூதர்களின் நியமனம் மாநில அரசாங்கத்தை சமூகத்துடன் நெருக்கமாக கொண்டு வருவதோடு மக்களிடையே சிறந்த சகிப்புத்தன்மையையும் புரிதலையும் வளர்க்க உதவும் என்று ஒற்றுமைத் துறைக்கான  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  டாக்டர் சித்தி மரியா மாமுட்  கூறினார்.

மக்கள் மத்தியில் சிறந்த புரிதலை வளர்ப்பதற்காக இந்த தூதர்கள் சமூகத்துடன் தங்களை நெருக்கமாகக் கொண்டு வருவார்கள். குறிப்பாக மதம் மற்றும் இனம் தொடர்பான பிரச்சினைகளில் தூண்டப்படும்போது மக்கள் விரைவாக வசைபாடுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை என்றார் அவர்.

இந்த திட்டத்திற்கு 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பூர்வக் குடியினர் உள்பட பல்வேறு இன, மத இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது என்று அவர் கூறினார்.

முன்னதாக, நேற்று இங்குள்ள  விண்ட்ஹம் ஹோட்டலில் நடைபெற்ற அறிமுக விழாவில் அந்த ஒற்றுமைத் தூதுவர்கள் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றனர்.

Pengarang :