ECONOMYNATIONALSUKANKINI

பி-23 கால்பந்து குழு தலைமைப் பயிற்றுநராக இளவரசன் நியமனம்

பெட்டாலிங் ஜெயா, செப் 1- தேசிய கால்பந்து குழுவின் துணைத் தலைமை பயிற்றுநரான இ.இளவரசன் 23 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்துக் குழுவின் (பி-23) தலைமைப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக மலேசிய கால்பந்து சங்கம் கூறியது.

துணைத் தலைமைப் பயிற்றுநராக ஸ்பெயினைச் சேர்ந்த ஜூவான் தோரேஸ் காரிடோ, உள்நாட்டு பயிற்றுநரான கிரிஸ் யோங், தென் கொரியாசைச் சேர்ந்த பயிற்றுநரான ஜிஇயோன் பார்க் மற்றும் லீ ஜேயோன் ஆகியோர் இளவரசனுக்கு துணையாக அக்குழுவை வழிநடத்துவர் என அது தெரிவித்தது.

பொறுப்புமிக்க இந்த பதவியை எனக்கு வழங்கியமைக்காக மலேசிய கால்பந்து சங்கத் தலைவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று இங்குள்ள விஸ்மா எஃப்.ஏ.எம்.மில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இளவரசன் தெரிவித்தார்.

தரமான இளம் விளையாட்டாளர்களை உருவாக்குவதற்கும் தேசிய குழுவில் திறன் மிக்க ஆட்டக்காரர்களைச் சேர்ப்பதற்கும் தாம் கடுமையாக பாடுபடவுள்ளதாக கிளந்தானைச் சேர்ந்த 60 வயதான அவர் சொன்னார்.


Pengarang :