ECONOMYSELANGORSUKANKINI

சுக்மா போட்டி- 40 பதக்கங்களுடன் முதல் மூன்று இடங்களைப் பிடிக்க  சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம், செப் 9- இம்மாதம் 16 முதல் 24 வரை நடைபெறும் 20வது மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) முதல் மூன்று இடங்களுக்குள் வருவதை சிலாங்கூர் இலக்காகக் கொண்டுள்ளது.

முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெற  40 தங்கம், 40 வெள்ளி மற்றும் 45 வெண்கலப் பதக்கங்களை வெல்வதற்கு மாநிலம் இலக்கு கொண்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

விளையாட்டு வீரர்களின் தற்போதைய நிலை மற்றும்  வெற்றிக்கு பங்களிக்கக்கூடிய வெளிப்புற அம்சங்களைக் கருத்தில் கொண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

போட்டியிடும் ஒவ்வொரு அணிக்கும் சமமான வாய்ப்பு உள்ளது. மேலும் எங்களால் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறோம். இதுதவிர,  கூடுதல் பதக்கங்களைப் பெறுவது சிலாங்கூர் பயிற்சியாளரின் மதிப்பீடாக இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய சிலாங்கூர் விளையாட்டு மன்றம் (எம்.எஸ்.என்.) மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது என்றார் அவர் .

எங்களிடம் எந்த இலக்குகளும் இல்லாத போதிலும்  முந்தைய போட்டிகளைப் போலவே நீச்சல், தடகளம், சைக்கிள் ஓட்டுதல், வில்வித்தை மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகள் தங்கப் பதக்கங்களுக்கு பங்களிக்க முடியும் என்று நம்புகிறோம் என்று அவர் இன்று கூறினார்.

முன்னதாக, அவர் இங்குள்ள சிலாங்கூர் இளைஞர் மற்றும் விளையாட்டு மன்ற வளாகத்தில் சிலாங்கூர் அணிக்கொடி ஒப்படைப்பு விழாவை நிறைவு  செய்தார்.


Pengarang :