ECONOMYHEALTHNATIONAL

புதிய கோவிட்-19 எண்ணிக்கை 2,226ஆகப் பதிவு- ஒருவர் மரணம்

ஷா ஆலம், ஆக 9- நாட்டில் நேற்று புதிய கோவிட்-19 நோய்த்தொற்று எண்ணிக்கை 2,226 ஆகப் பதிவானது.

கடந்த புதன்கிழமை இந்த எண்ணிக்கை   2,428 சம்பவங்களாக இருந்ததாக  சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று பதிவான கோவிட்-19 சம்பவங்களில் இரண்டு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவியவை என்று அது தெரிவித்தது.

இதனுடன் சேர்த்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 99 ஆயிரத்து 663 பேராக ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில்,  கோவிட்-19 தொடர்புடைய ஒரு மரணச் சம்பவம் நேற்று பதிவானது. இந்நோய்க்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை  36,270 ஆக உள்ளது.

நேற்று  1,894 பேர் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை மொத்தம் 47 லட்சத்து 35 ஆயிரத்து 993 பேராக ஆக அதிகரித்துள்ளது.


Pengarang :