ECONOMYSELANGOR

பிரத்தியேகச் சிறார்களுக்கான இலவச தொடக்கப் பரிசோதனையில் பங்கேற்க அனிஸ் அழைப்பு

ஷா ஆலம், செப் 9- இலவச தொடக்கப் பரிசோதனை மேற்கொள்வதற்கு இரண்டு மணி நேரத்தை ஒதுக்கும்படி பிரத்தியேகச் சிறார்களைக் கொண்ட பெற்றோர்களுக்கு அனிஸ் எனப்படும் பிரத்தியேக மைந்தர் இலாகா அழைப்பு விடுத்துள்ளது.

இதுவரை எந்த மருத்துவப் பரிசோதனையையும் மேற்கொள்ளாத பிரத்தியேகச் சிறார்களுக்காக இந்த மருத்துவ பரிசோதனை இயக்கம் நடத்தப்படுவதாக அந்த இலாகா தெரிவித்தது.

‘பணிப் பயிற்சி‘ மற்றும் ‘பேச்சுப் பயிற்சி‘ போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் இச்சோதனையை மேற்கொள்வர் என்றும் இச்சோதனையின் முடிவுகள் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக பெற்றோர்களிடம் வழங்கப்படும் என்றும் அது தெரிவித்தது.

மாற்றுத் திறனாளி பிள்ளைகளின் நடப்பு மேம்பாடு குறித்து பெற்றோர்கள் அறிந்து அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்கில் இந்த பரிசோதனை இயக்கம் நடத்தப்படுகிறது என்றார் அவர்.

பிரத்தியேகச் சிறார்களுக்கு உரிய சோதனைகளை மேற்கொள்ள விரும்பும் பெற்றோர்கள் https://www.anisselangor.com/daftarsaringan எனும் அகப்பக்கம் வாயிலாக பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனிஸ் திட்டத்திற்காக இவ்வாண்டு 30 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.

டிடேக் அனிஸ் திட்டத்தை மேற்கொள்வதற்காக நிதியுதவி வழங்குவது உள்பட அனிஸ் அகாடாமியை உருவாக்கும் திட்டத்திற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.


Pengarang :