ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அனைத்து இன மக்களின் நலனையும் பக்கத்தான் அரசு காக்கும்-அன்வார் உறுதி

பெட்டாலிங் ஜெயா, செப் 10- சிலாங்கூரிலுள்ள அனைத்து இன மக்களின் குறிப்பாக வசதி குறைந்த தரப்பினரின் நலனை பக்கத்தான் ஹராப்பான் தொடர்ந்து காத்து வரும்.

இந்த நிலைப்பாட்டை புறக்கணிக்கும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதிகளாக பணியாற்றும் தகுதியை பக்கத்தான் தலைவர்கள் இழந்து விடுவர் என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாம் அனைத்து இன மக்களையும் காப்பாற்ற வேண்டும். மலாய், சீன மற்றும் இந்தியர்ளின் குறிப்பாக வசதி குறைந்தவர்களின் நலனை நாம் காக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் தலைவர்களாக இருப்பதற்குரிய தகுதியை நாம் இழந்து விடுவோம் என்றார் அவர்.

நன்மை செய்வதை மட்டுமே நாம் குறிக்கோளாக கொள்ள வேண்டும். ஒடுக்குமுறையை தவிர்க்க வேண்டும். பொருளாதாரம் காக்கப்பட வேண்டும். மொழியை மேன்மையுறச் செய்ய வேண்டும், இவ்வாறு செய்தால் இன விவகாரம் தலையெடுக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

கெஅடிலான் இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் நேற்றிரவு நடைபெற்ற பெந்தாஸ் அனாக் மூடா நிகழ்வில் உரையாற்றிய போது கெஅடிலான் கட்சித் தலைவருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டைக் காப்பதில் தீவிர கவனம் செலுத்தும்படி கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர்ப் பிரிவினரை டத்தோஸ்ரீ அன்வார் தமதுரையில் கேட்டுக் கொண்டார்.

இளைஞர் பிரிவினர் தன்னார்வலர்களாகச் செயல்பட்டு மக்களுக்கு புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். மகளிர் பிரிவினரும் புதிய எழுச்சியுடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.

பெற்றோர்களுடன் அனைவருடன் சேர்ந்து எழுச்சி பெற வேண்டும். இது கட்சி சம்பந்தப்பட்ட விஷயமல்ல. மிகவும் பின்தங்கியுள்ள நாட்டைப் பற்றிய விஷயமாகும் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :