ALAM SEKITAR & CUACANATIONALPBT

சிலாங்கூர் வான் கண்காட்சியின் பரிவர்த்தனை 170 கோடி வெள்ளியை எட்டியது

ஷா ஆலம், செப் 10- சிலாங்கூர் வான் கண்காட்சியின் (எஸ்.ஏ.எஸ்.2022) பரிவர்த்தனை  மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து 170 கோடி வெள்ளியை எட்டியது.

கடந்தாண்டு நடைபெற்ற  கண்காட்சியில் 100 கோடி வெள்ளி மதிப்பிலான பரிவர்த்தனை பதிவு செய்யப்பட்டதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இரு தினங்களுக்கு முன்னரே 800 கோடி வெள்ளி பரிவர்த்தனையை பதிவு செய்து விட்டோம். நைஜிரியா, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளுடனான 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று காலை பரிவர்த்தனையின் மதிப்பு 170 கோடி வெள்ளியை எட்டியது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. ஏனென்றால் சில நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளன. எனினும், ஏற்பாட்டாளர்களிடம் அது குறித்து தெரிவிக்கவில்லை என்றார் அவர்.

இந்த கண்காட்சியை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவிதார்.

இந்த கண்காட்சியில் வான் போக்குவரத்து தொடர்பான வர்த்தகம் மட்டும் நடைபெறவில்லை. மாறாக, விவசாயம், தற்காப்பு மற்றும் வானிலை ஆய்வுப் பணிகளுக்கு பயன்படக்கூடிய டிரோன் தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தகமும் இடம் பெற்றிருந்தது என்று அவர் சொன்னார்.


Pengarang :