ECONOMYSELANGORSUKANKINI

சுக்மா போட்டி- வூஸூ, கராத்தே விளையாட்டாளர்களுக்கு எம்.பி.எச்.எஸ். வெ.10,000 நன்கொடை

ஷா ஆலம், செப் 12– இம்மாதம் நடைபெறும் மலேசிய விளையாட்டுப் (சுக்மா) போட்டியில் சிலாங்கூரை பிரதிநிதித்து விளையாடும் வூஸூ மற்றும் கராத்தே டூ விளையாட்டாளர்களுக்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் ஊக்கத் தொகையாக 10,000 வெள்ளியை வழங்கியது.

அவ்விரு அணிகளின் காப்பாளர் என்ற நிலையில் போட்டிக்கான உபகரணங்களைத் தயார் செய்வதற்கும் ஏற்பாடுகளை கவனிப்பதற்கும் இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக அந்த நகராண்மை கழகம் கூறியது.

வூஸூ மற்றும் கராத்தே போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்கும் உபகரணங்களைத் தயார் செய்வதற்கும் அவ்விரு விளையாட்டு அணிகளின் காப்பாளர் என்ற முறையில் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 10,000 வெள்ளியை வழங்குகிறது என்று தனது பேஸ்புக் பதிவில் அது தெரிவித்தது.

இந்த  நிதியுதவி தவிர்த்து இதர வகை உதவிகளையும் போட்டி நடைபெறும் சமயத்தில் அவ்விரு குழுக்களுக்கும் வழங்கப்படும். வாகன உதவி, உணவுக்கான செலவுப்படி, டி.சட்டை, காலணி, பேக் ஆகியவையும் அதில் அடங்கும்.

நகராண்மைக் கழகத்தால் தத்தெடுக்கப்பட்ட அவ்விரு அணிகளின் விளையாட்டாளர்களுக்கு தேநீர் விருந்து வழங்கும் நிகழ்வு கடந்த 9 ஆம் தேதி டாமன்சாரா ரோயாலி சூலான் ஹோட்டலில் நடைபெற்றது. அந்நிகழ்வின் போது நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி முகமது நோர் இந்த உதவித் தொகையை வழங்கினார்.


Pengarang :