ECONOMYNATIONALSELANGORSUKANKINI

சுக்மா 2022- வூஸூ போட்டியில் சிலாங்கூருக்கு முதல் தங்கம்

ஷா ஆலம், செப் 15– மலேசிய விளையாட்டு போட்டியில் (சுக்மா) சிலாங்கூர் அணி வூஸூ போட்டியின் மூலம் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.

வூஸூ தைஜிகுவான் பிரிவில் மேண்டி சிபில் சென் முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றதாக சிலாங்கூர் விளையாட்டு மன்றம் கூறியது.

மேண்டி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகளிர்  வூஸூ தைஜிகுவான் பிரிவில்  முதல் தங்கத்தை  வென்றுள்ளார் என்று அம்மன்றம் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தது.

நேற்று நடைபெற்ற மகளிர் தைஜிகுவான் பிரிவு வூஸூ போட்டியில் 9.6200 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை மேண்டி பெற்றார். இப்போட்டியில் மலாக்காவின் சிட்னி ஷி ஷூவான் தங்கப்பதக்கம் வென்றார்.


Pengarang :