ECONOMYSELANGOR

வெள்ளம் கண்டறிதல் முறை சுபாங் ஜெயாவில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை அளிப்பதை எளிதாக்குகிறது

சுபாங் ஜெயா, செப்டம்பர் 17: ஊராட்சி மன்றத்தால் நிறுவப்பட்ட வெள்ளக் கண்டறிதல் (அபாய எச்சரிக்கை), சுபாங் ஜெயாவில் வசிப்பவர்களுக்கு பருவமழை மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய வெள்ளத்திற்கான எச்சரிக்கை அளிப்பதை  எளிதாக்குகிறது.

சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸி கூறுகையில், சுபாங் ஜெயா நகர சபையின் (எம்பிஎஸ்ஜே) மேற்பார்வையின் கீழ் உள்ள அமைப்பு, ஒரு பகுதியில் கனமழை ஆபத்தான நிலையை எட்டினால் தானாகவே எச்சரிக்கிறது.

“நகர சபையால் அவர்களின் பேரிடர் துறைக்கு ஒரு குறுஞ்செய்தி சேவை (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும். பின்னர் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பது தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

“எனவே சமீபகாலமாக நிலவும் சீரற்ற காலநிலையில் அனைத்து தரப்பினரும் கவனமாக இருக்க வேண்டும்,” என்று நேற்று, பண்டார் சன்வேயில் உள்ள PJS 7/15 அடுக்குமாடி குடியிருப்புகளின் 420 குடும்பங்களுக்கு அடுக்குமாடி வீடுகளுக்கான  பட்டா  வழங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

புதன்கிழமை, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் செயலாளர் அனைத்து மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுக்களையும் (JPBD) அக்டோபர் முதல் டிசம்பர் வரை எதிர்பார்க்கப்படும் மழை மற்றும்  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு வலியுறுத்தினார்.

பல பகுதிகள் வெள்ளம், திடீர் வெள்ளம், புயல் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் சமாளிக்க தயார் படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ஹாரிஸ் காசிம் அறிவுறுத்தல் கடிதம் மூலம் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த மிஷல் இங், கடந்த ஆண்டு பிற்பகுதியில் சிலாங்கூரைத் தாக்கிய பெரும் வெள்ளத்தில் இருந்து பாடம் எடுப்பதுடன், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைப்பதற்கான நீண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.


Pengarang :