ALAM SEKITAR & CUACAECONOMY

வெள்ளத்தின் போது  உணவுக் கையிருப்பை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் – அமைச்சு தகவல்

ஷா ஆலம், செப் 19– ஆண்டு இறுதியில் ஏற்படும் மழை காலத்தின் போது  உணவுக் கையிருப்பு போதுமான அளவு இருப்பதை உறுதி செய்வதற்கு சிறப்பு செயல் திட்டம் வரையப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

அமைச்சின் சிறப்புக் குழுவால் வரையப்பட்டுள்ள அந்த செயல் திட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் பங்கேற்பும் உள்ளதாக அவர் சொன்னார்.

மழை காலம் உண்மையில் சவால்மிக்க ஒன்றாகும். உணவு விநியோகம் முழுமையாகப் பாதிக்கப்படாது என்று உத்தரவாதமளிக்க முடியாது. நிச்சயமற்ற வானிலையின் போது உணவு விநியோகம் 100 விழுக்காடு போதுமானதாக உள்ளதை உறுதி செய்வது கடினமானதாகும். எனினும், உணவு விநியோகம் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சரவா மாநிலத்தின் செரியானில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

வரும் நவம்பர் மாதம் தொடங்கி அடை மழை பெய்யும் என்றும் அதனால் கடுமையான வெள்ளம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.


Pengarang :