ECONOMYSUKANKINI

பி20 ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை ஹரிமாவ் மூடா நழுவவிட்டது

கோலாலம்பூர், செப் 19– உலான்பாத்தார் நகரில் உள்ள மங்கோலிய கால்பந்து சம்மேளன அரங்கில் நேற்று நடைபெற்ற 20 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான ஆசியக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் (பி20) தேசிய அணி தென் கொரியாவிடம் 6-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

இந்த இ பிரிவு இறுதிச் சுற்றுத் தேர்வாட்டத்தின் போது தென் கொரிய ஆட்டக்காரரான லீ யோங் ஜூன் ஆட்டத்தின் 34,74 மற்றும் 81வது நிமிடங்களில் மூன்று கோல்களைப் புகுத்தி ஹரிமாவ் மூடா குழுவை ஆட்டங்காணச் செய்தார்.

இது தவிர ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் லீ சியுவோங் மூலமாகவும் 88 நிமிடத்தில் பெனால்டி வாயிலாகவும் 50 வது நிமிடத்தில் போ ஜூன்ஹோ மூலமாகவும் தென் கொரிய அணி மேலும் மூன்று கோல்களைப் புகுத்தியது.

மலேசிய அணி தனது இரு கோல்களை ஆடாம் பர்ஹான் பைசால் மூலம் ஆட்டத்தின் 55வது நிமிடத்திலும் அலிஃப் இஸ்வான் உபைதுல்லா சம்சுல் மூலம் 68வது நிமிடத்திலும் புகுத்தியது.

இந்த தோல்வியின் வழி இ பிரிவில் முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடிக்கும் வாய்ப்பினை மலேசிய அணி நழுவ விட்டது. இப்பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் மங்கோலிய அணி இலங்கையை 7-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது.


Pengarang :