ECONOMYHEALTHSELANGOR

தீபாவளி கொண்டாட்டத்தின் போது  நிலையான இயக்க முறையை கடைபிடியுங்கள்

ஷா ஆலம், செப்டம்பர் 19: ஏப்ரல் 1, 2022 அன்று, மலேசியா எண்டமிக் நிலைக்கு மாறியது. இப்பொழுது முகக் கவரி அணிவது தனிப்பட்டவர்களின் விருப்பம் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தளர்த்தப்பட்டாலும், கோவிட்-19 தொற்று அபாயத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும், பொது சுகாதார முறைகளை கடைபிடிக்க வேண்டும் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும், நாமும் நம் குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வது மிகவும் முக்கியம் என்று வீ கணபதிராவ் கூறினார்.

கூடுதலாக, அவர் மக்கள் முகக் கவரி அணிய மிகவும் ஊக்குவிக்கிறார், ஏனெனில் இது தொற்று பரவுவதை குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்ஒபி இன் மாற்றம், கோவிட்-19 நோய் தொற்று அபாயத்தை பொதுமக்கள் இலகுவாக எடுத்துக் கொள்ளலாம் என்று அர்த்தமல்ல. இந்த வருட தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் கொண்டாட நான் விரும்புகிறேன் என்றார்.


Pengarang :