ECONOMYMEDIA STATEMENT

கம்போடியாவில் வேலை சிண்டிகேட்களிடம் மாட்டிக்கொண்ட ஐவர் வெற்றிகரமாக திரும்ப அழைத்து வரப்பட்டனர்

கோலாலம்பூர், செப்டம்பர் 20: கம்போடியாவில் வேலை வாய்ப்பு மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட மேலும் ஐந்து மலேசியர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு நேற்று தாயகம் திரும்பினர்.

நேற்றிரவு வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தேகத்திற்குரிய ஐந்து நபர்களும் பிற்பகல் 2 மணிக்கு MH755 விமானம் மூலம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு (KLIA) வந்தடைந்ததாக தெரிவித்தனர்.

கம்போடியாவில் வேலை வாய்ப்பு மோசடி சிண்டிகேட்டில் பதிவாகிய 158 சம்பவங்களில் நேற்று வரை மொத்தம் 143 பேர் மீட்கப்பட்டனர்.

“காப்பாற்றப்பட்டவர்கள் எண்ணிக்கையில், 29 பேர் இன்னும் கம்போடியாவில் உள்ள குடிவரவு தடுப்புக் கிடங்கில் உள்ளனர், மீதம் உள்ளவர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பிவிட்டனர்.

“கம்போடியாவில் இந்த மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட தாக கூறப்படும் மலேசியர்களைக் கண்காணிப்பதற்கான முயற்சிகளை புனோம் பென்னில் உள்ள மலேசியத் தூதரகம் தொடர்ந்து தீவிரமாகத் தொடர்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவைத் தவிர, லாவோஸ், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் சிண்டிகேட்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மற்ற மலேசியத் தூதரகங்கள் மூலம் வெளியுறவு அமைச்சகம் தீவிரப்படுத்துகிறது.

பதிவுகளின் அடிப்படையில், தாய்லாந்தில் மொத்தம் 16 மலேசியர்கள், லாவோஸில் 27 மற்றும் மியான்மரில் ஐந்து பேர், சிண்டிகேட் நடவடிகையில்  பாதிக்கப்பட்டவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

இதற்கிடையில், கண்காணிக்கப்படும் எண்ணிக்கை தாய்லாந்தில் 12 பேரும், லாவோஸில்  28 பேரும், மியான்மரில் 54 பேரும் உள்ளனர்.

“சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள மலேசிய தூதரகங்கள் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதுடன், அந்த நாடுகளின் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து, சிண்டிகேட்டால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து மீட்கும் முயற்சியில் ஈடுபடும்” என்று அவர் கூறினார்.


Pengarang :