ECONOMYPBTSELANGOR

கோத்தா டமான்சாராவில் 400 குடும்பங்கள் தீபாவளி ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெறுவார்கள்

ஷா ஆலம், செப்டம்பர் 20: கோத்தா டமான்சாரா சட்டமன்றத்தில் மொத்தம் 400 இந்திய குடும்பங்கள் அடுத்த மாதம் தீபாவளியை முன்னிட்டு ஷாப்பிங்  செய்ய  பற்றுச்சீட்டுகள் பெறுவார்கள்.
RM100 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் ராயா திட்டத்தின் மூலம் பெறுநர்கள் தீபாவளி உபகரணங்களைத் தயார் செய்ய உதவும் இத்திட்டத்தில்  வசதி அற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக மக்கள் பிரதிநிதி ஷாதிரி மன்சோர்
கூறினார்.

அனைத்து பெறுநர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் ஜெயண்ட் கோத்தா டமான்சாராவில் விநியோகம் செய்யப்படும். இந்த முயற்சி அவர்களின் சுமையை குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பண்டிகையை கொண்டாட முடியும், என்று அவர் இன்று சுபாங்
பிஸ்தாரியில் உள்ள மக்கள் ஏசான் விற்பனை திட்டத்தில் சந்தித்தபோது கூறினார்.

ஜோம் ஷாப்பிங் ராயா என்பது மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது, இது மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வைக் காக்கும் ஒரு நீண்ட கால முயற்சியாகும். ஆனால் இதில்  குறைந்த வருமானம் பெறும் குழுக்களைக் குறிவைக்கிறது.

இது எல்லா பண்டிகைகளுக்கும்,  இனம் மற்றும் கொண்டாட்டத்திற்கு ஏற்ப  மக்களை அடையாளப்படுத்தி வழங்கப் படுகிறது.  ஒவ்வொரு பகுதியிலும் சமூக சேவை  மையங்கள் மூலம் உதவிகள் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜோம் ஷாப்பிங் திட்டத்திற்காக மொத்தம் RM80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Pengarang :