ECONOMYMEDIA STATEMENT

போலி பூனை உணவை வைத்திருந்த மாணவருக்கு வெ.25,000 அபராதம்

கோலாலம்பூர், செப் 21 – கடந்த ஆண்டு 9,130 போலி பூனை உணவுப் பொட்டலங்களை வைத்திருந்த குற்றத்திற்காக தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் டாங் மாவ் யீ  என்ற அந்த மாணவர் ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி
எமிலியா கஸ்வதி முகமட் காலிட் தீர்ப்பளித்தார்.

தமக்கெதிரான குற்றச்சாட்டை 25 வயதான டாங்  குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி அவருக்கு இத்தண்டனையை வழங்கினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி  மாலை 4.00 மணியளவில் கெபோங்கில் உள்ள ஜாலான் மெட்ரோ பெர்டானா வளாகத்தில் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக டாங் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 10 லட்சம் வெள்ளிக்கும் மிகாத அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் வர்த்தக முத்திரைகள் சட்டம் 2019 இன் பிரிவு 101 (பி) இன் கீழ் டாங் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அவர் அபராதத் தொகையைச் செலுத்தினார்.


Pengarang :