ECONOMYSELANGOR

கிள்ளான் ஐ-சீட் கண்காட்சிக்கு பொது மக்களை கவரும் இதர அம்சங்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது

ஷா ஆலம், செப்ட் 21: எதிர்வரும் அக்டோபர் 7 , 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கிள்ளான் செட்டி பாடாங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ”சிலாங்கூர் இந்திய தொழில்முனைவோர் மேம்பாடு (ஐ-சீட்) தொழில் கண்காட்சி,” பின்தங்கிய இந்திய தொழில் முனைவோர்களை வணிகத்துறையில் மேம்படுத்துவதும் திட்டமாகும்.

இதை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் அழைக்கப் பட்டுள்ளதாகவும் ஐ-சீட் துறை தலைவரும், சமூக பொருளாதார மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ் கூறினார்.

ஐ-சீட் உபகரணங்களுக்கான உதவியை பெற்ற 417 சிறு தொழில் முனைவோரில் சுமார்  100 போருக்கு இந்த கண்காட்சியில்  பங்கேற்க  வாய்ப்பு அளிக்கிறோம். இந்நிகழ்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

அதிகமான வருகையாளர்கள் கண்காட்சிக்கு ஈர்க்க அதிர்ஷ்ட குலுக்கு, வழி மோட்டார் சைக்கிள்கள், தொலைக்காட்சிகள், சம்சுங் Tab மற்றும் கைத்தொலைபேசி போன்ற கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கும் திட்டமும் உண்டு.

மேலும், இந்நிகழ்ச்சியில் உள்ளூர் நடிகர்களின் கலை மற்றும் கலாச்சார ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், இளைஞர்களுக்காக நடன போட்டி மற்றும் சிறுவர்களுக்காக வர்ணம் தீட்டும் போட்டியையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பெரியவர்களுக்காக இரத்த தானம் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, கிள்ளான் அருகே உள்ள அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறவும் நிகழ்ச்சியை குதூகலப்படுத்த அழைக்கப்படுகிறார்கள்.


Pengarang :