ECONOMYMEDIA STATEMENT

குழந்தைகள் உடல் உறுப்புகளுக்காக கடத்தப்படுவதாக வைரலான செய்தி உண்மையல்ல – புக்கிட் அமான்

கோலாலம்பூர், செப் 27 – உடல் உறுப்புகளை திருடுவதற்காக 6 குழந்தைகளை கடத்திச் சென்றது குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி போலியானது.

புக்கிட் அமான் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் ஏசிபி ஏ.ஸ்கந்தகுரு கூறுகையில், கடத்தல் குறித்து பொது மக்களை விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தும் போலிச் செய்தி 2017 ஆம் ஆண்டு முதல் சுற்றி வருகிறது, மேலும் சமீபத்தில் பல்வேறு சமூக ஊடக தளங்களில் மீண்டும் வெளியிடப்பட்டது.

“இந்த குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் கொடுக்கப்படுவடுவதாகக் கூறப்படுகிறது, இதனால் அவர்கள் பேச முடியாமல் போகிறார்கள். அவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு கோழி லாரியின் வழி அண்டை நாட்டிற்கு எளிதாக கொண்டு செல்ல முடியும்.

“அதிகாரிகள் லாரியை ஆய்வு செய்து குழந்தைகளை கண்டுபிடித்ததாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஸ்கந்தகுரு வின் அறிக்கை படி, இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு எந்த புகாரும்  கிடைக்கவில்லை.

போலிச் செய்திகளை பகிர்வது  கண்டு பிடிக்கப் பட்டால், தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1988ன் பிரிவு 233ன் கீழ் நெட்வொர்க் வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படும் என்றார்.

மேலும், ஆதாரமற்ற மற்றும் உறுதி செய்யப்படாத செய்திகளை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், இதுபோன்ற செய்திகளை பகிர்வதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.


Pengarang :