ANTARABANGSAECONOMY

மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்களை வாங்க ஆர்வமாக உள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது

அங்காரா, செப்டம்பர் 27 – போர்க்கள வெற்றிக்குப் பிறகு பல நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய துருக்கிய பாதுகாப்பு நிறுவனமான பேக்கரிடமிருந்து ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை வாங்க மலேசியாவும் இந்தோனேசியாவும் ஆர்வமாக இருப்பதாக துருக்கி திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

“பல ஆசிய நாடுகள், குறிப்பாக மலேசியா மற்றும் இந்தோனேசியா, நமது பாதுகாப்புத் துறை தயாரிப்புகளில் மிகுந்த ஆர்வம் காட்டி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக  துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு தோக்கியோவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்ற அமைச்சர், “ஜப்பானின் ஆளில்லா விமானங்களுக்கான தேவையை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் நிறைவு செய்வோம்’ என்று அமைச்சர் மேலும் கூறினார்.

சிரியா, உக்ரைன் மற்றும் லிபியாவில் ஏற்பட்ட மோதல்களில் துருக்கிய ஆளில்லா விமானங்களுக்கான சர்வதேச தேவை அதிகரித்தது. இந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 20 ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை பேக்கர் வழங்கியதாக செப்டம்பர் 21 அன்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது


Pengarang :