ECONOMYSELANGOR

அடுத்த ஆண்டுக்கான திட்டங்களை செயல்படுத்த சிப்பாங் முனிசிபல் கவுன்சில் வெள்ளி 20.695 கோடி செலவிடும்

ஷா ஆலம், செப்டம்பர் 30: சிப்பாங் முனிசிபல் கவுன்சில் (MPSepang) திட்டமிட்ட மேம்பாடுகளை செயல்படுத்த அடுத்த ஆண்டு RM20.695 கோடி செலவழிக்க தயாராகிறது.

முனிசிபல் கவுன்சில்  தலைவர் டத்தோ அப்துல் ஹாமிட் ஹுசைன் 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் எட்டப்பட்ட RM18.595 கோடி வருவாயை கணக்கில் கொண்டு மதிப்பீட்டை செய்வதாக கூறினார்.

“இந்த தயாரிப்பு 2021 பட்ஜெட்டில் அடைவு மற்றும் 2022 பட்ஜெட்டின் முதல் அரையாண்டில் வசூலை கணக்கில் எடுத்துக்கொள்கிறது, சிப்பாங் முனிசிபல் கவுன்சிலின் கொள்கைகள் மற்றும் உத்திகள் முழுமையாக செயல்படுத்த படுவதை உறுதி செய்கிறது,” என்று அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் பேசிய அவர், சிப்பாங் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மேம்பாடுகள் திட்டமிடுவதற்கான எட்டு முக்கிய உக்திகளை பட்ஜெட்டில் கோடிட்டுக் காட்டினார்.

அப்துல் ஹாமிட் இன் கூற்றுப்படி, நடைமுறைப்படுத்தப்படும் விஷயங்களில் வருமான ஆதாரங்கள் பன்முகப்படுத்துதல், தொடர்ந்து விவேகமான செலவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் நகர சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

கூடுதலாக, பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தயாரிப்பில் சமூக மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு சிப்பாங் முனிசிபல் கவுன்சில் பலதர தேவைகளை உள்ளடக்கிய ஒரு பட்ஜெட்டை உருவாக்கி உள்ளது.

பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பொது வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய நிதி ஒதுக்கீடு களுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.


Pengarang :