ECONOMYSELANGOR

சிறிய இடைவெளிக்குப் பிறகு மலிவு விற்பனை 7ஆம் தேதி மீண்டும் தொடரும்

ஷா ஆலம், செப் 3- மாநிலம் முழுவதும் தினசரி வாகனங்களில் சென்று மலிவு விற்பனையை மேற்கொள்ளும் ஏசான் மக்கள் விற்பனைத் திட்டத்திற்கு இன்று தொடங்கி வரும் 7 ஆம் தேதி வரை ஓய்வு தரப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்ம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான இந்த திட்டம் வரும் 7 ஆம் தேதி தொடங்கி தினசரி ஒன்பது இடங்களில் வழக்கம் போல் நடைபெறும்.

பொது மக்கள் பி.கே.பி.எஸ். அகப்பக்கம் வாயிலாக அல்லது https://linktr.ee/myPKPS  என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களை அறிந்து கொள்ளலாம்.

கடந்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அனைத்து 56 தொகுதிகளில் உள்ள 160 இடங்களில் இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கு மாநில அரச ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

பொருள்  விலையேற்றத்தினால் அவதியுறும் மக்களுக்கு உதவும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் வாயிலாக இதுவரை 80,000 பேர் வரை பயனடைந்துள்ளனர்.

இந்த விற்பனைத்  திட்டத்தில் ஒரு கோழி 10.00 வெள்ளி விலையிலும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளி விலையிலும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இது தவிர, கெம்போங் மற்றும் செலாயாங் மீன்கள் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :