ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

யாயாசான் சிலாங்கூர் நடத்திய தேசிய தின குறும்பட போட்டியில் அசுந்தா இடைநிலைப்பள்ளி வெற்றி

ஷா ஆலம், அக் 5- நாட்டின் 65வது தேசிய தினத்தை முன்னிட்டு யாயாசான் சிலாங்கூர் அறவாரியம் நடத்திய குறும்படப் போட்டியில் பெட்டாலிங் ஜெயா, அசுந்தா தேசிய இடைநிலைப்பள்ளி வெற்றி பெற்றது.

 இப்போட்டியில் முதலிடத்தைப் பெற்ற அசுந்தா இடைநிலைப்பள்ளிக்கு 700 வெள்ளி பரிசும் இரண்டாம் இடத்தைப் பிடித்த சுங்கை பெசார், பாகான் தெராப் இடைநிலைப்பள்ளி மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்த தஞ்சோங் காராங், டத்தோ ஹருண் தேசிய இடைநிலைப்பள்ளிக்கு முறையே  400 மற்றும் 200 வெள்ளி பரிசும் வழங்கப்பட்டது.

நாட்டு மக்களிடம் குறிப்பாக இளையோர் மத்தியில் நாட்டுப் பற்றை விதைக்கும் நோக்கில் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக யாயாசான் சிலாங்கூர் கூறியது.

யாயாசான் சிலாங்கூரின் ஏற்பாட்டு ஆதரவிலான மாணவர்கள் பயிலும் பள்ளிகளை இலக்காக கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் மத்தியில் நாட்டின் மீதான பற்றுதலை அதிகரிப்பதையும் அவர்களிடமுள்ள ஆக்கத் திறனை வெளிக்கொணர்வதையும் இந்த போட்டி நோக்கமாக கொண்டிருந்தது என்று அந்த அறவாரியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

கடந்த ஆகஸ்டு முதல் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டிக்கு 21 காணொளிகள் அனுப்பப்பட்டன. கவிதை, பாடல் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை  அவை கொண்டிருந்தன என அவ்வறிக்கை குறிப்பிட்டது.

இப்போட்டியில் கலந்து கொண்ட இதர அனைத்துப் பள்ளிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா 100 வெள்ளி வழங்கப்பட்டது.


Pengarang :